தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக பெரிய நடிகர்கள் படம் வெளியாகும் நிலையில், இந்த முறை அது சற்று மாறுபட்டுள்ளது.
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து நேற்று வெளியாகி உள்ள “சர்தார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாஸிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. படத்தின் ஸ்கிரீன் பிளே, பின்னணி இசை பெரிதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் 4 கோடிகள் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருவதால் இதன் நாளுக்கு நாள் வசூல் உயரும் என திரை அரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அணுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள “பிரின்ஸ்” திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தமன் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதை ஒன்றுமே சொல்லி கொள்ளும் படி இல்லை என ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றாலும் சுமார் 5 கோடிகளை இப்படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது இந்த படத்தின் வசூல் போக போக குறையும் என திரை அரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.