Mnadu News

இந்திய ஹாக்கி சங்க தலைவர் தேர்வு!

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி வரலாற்றில் முதன் முறையாக விளையாட்டு வீரர் ஒருவர் இந்திய ஹாக்கி அணி சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதுவும் போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் திலிப் டர்க்கி (44) போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஹாக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஹாக்கி தலைவர் போலாநாத் சிங் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ராகேஷ் கத்யால் மற்றும் போலா நாத் சிங் தங்கள் மனுகளை வாபஸ் பெற்றதையடுத்து திலீப் டர்க்கி இந்திய ஹாக்கியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்றதை தொடர்ந்து திலீப் டிர்க்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய ஹாக்கி புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த 44 வயதான திலீப் டிர்க்கி, 1996, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் ஆக்கி அணிகளில் இடம்பெற்று இருந்தார். 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை வென்ற இந்திய அணியிலும் திலீப் டிர்க்கி இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ல் ஓய்வு பெற்றார்.

மேலும் இந்திய ஹாக்கி சங்க துணை தலைவர், இணைச் செயலர், பொருளாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. பொருளாளர் பதவிக்கு தமிழக ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More