நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.
நேற்று 3 வது ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்னில் சுருண்டது.
138 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை தன்வசம் ஆக்கியது.
தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நியூசிலாந்துக்கு இது தொடரின் முதல் வெற்றியாகும். வங்காளதேசம் சந்தித்த இரண்டாவது தோல்வியாகும். இந்நிலையில், 4வது லீக் போட்டியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நாளை காலை மீண்டும் மோத உள்ளன.