சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்த செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் இன்று தீர்ப்பு அளித்தார். அதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; ,மருமகன் நவீன்குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கையும் நீதிபதி இளந்திரையன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More