அதிமுகக் கட்சி அமமுக அதிமுக என இரண்டாகப் பிரிந்த போது அமமுகவில் இணைந்தார் விபி. கலைராஜன். தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக அமமுகவில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை கட்சி விதிமுறைகளை மீறியதாகக் கூறி விபி கலைராஜனை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியிருப்பதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் திருச்சியில் ஸ்டாலினை நேரில் சந்தித்த விபி கலைராஜன் அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த விபி.கலைராஜன் டிடிவி தினகரனுக்கு தனக்கும் எந்தவிதமான மனக்கசப்புகளும் இல்லை எனவும், அமமுகவில் இருந்து மேலும் சிலர் திமுகவில் தங்களை விரைவில் இணைத்துக் கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.