கடந்த 2005-இல் முன்னாள் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதிக் அகமதுவும், அஸ்ரஃபும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அவ்வேளையில் ஊடகவியலாளர்கள் போல் நின்றிருந்த இருவர், அதிக் மற்றும் அஸ்ரஃப்பை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூன்று பேரையும் 7 நாள்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More