முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 76) உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் காலமானார். மதுரை, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 76) உடல்நலக்குறைவால் மதுரை திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
1977, 80, 84, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 1991 முதல் 1998 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். 2006-ல் அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார். பெரியகுளம் எம்.பி. தொகுதியில் வென்று வாஜ்பாய் அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை மந்திரியாக இருந்துள்ளார்.