Mnadu News

மும்பை தாக்குதல் நபர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஜெய்சங்கர் வேதனை.

தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா பாதுகாப்பு சபையின் முறைசாரா மாநாடு மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர். மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மாநாட்டில் மைக்கேல் மவுஸ்ஸா பேசும் போது, “தீவிரவாதிகள் கிரிப்டோகரன்சியின் மூலம் நிதி உதவி பெறுவதும், சமூக ஊடகங்கள் மூலம் ஆதரவாளர்களை திரட்டுவதும் அதிகரித்து வருகிறது என்று பேசினார். அவரையடுத்து எஸ்.ஜெய்சங்கர் பேசிய போது, “தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா-வால் போதிய வெற்றியை பெற முடிவதில்லை. இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னமும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை தண்டிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது என்று பேசி உள்ளார்.

Share this post with your friends