மும்பையில், 2008 ஆம் ஆண்டு; பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு உதவிய கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.அதையடுத்து,அவரை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது.இந்நிலையில்,லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், 2008ஆம ஆண்டைய மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம். அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட குற்றங்களுக்காக நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More