கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம. 25 ஆம் தேதி; போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.இந்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ரஷ்யாவுடன் இணைய இந்த பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நான்கு பிராந்தியங்களும் ரஷ்யாவுடன் முறைப்படி இணைக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பிரகடனப்படுத்தினார். ரஷ்யாவின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More