காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சமாஜ்வாடி கட்சியின் புரவலரும், நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான முலாயம் சிங் யாதவின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி , காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேர்தல் போட்டியாளருமான சசி தரூர் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More