உத்தர பிரதேச முதல் அமைச்சர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் நேற்று இயற்கையெய்தினார்.இதையடுத்து, உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங்கின் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.,இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகல், பிகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ், மத்திய பிரதேசம் முன்னாள் முதல் அமைச்சர் கமல் நாத், பாபா ராம்தேவ், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக சார்பாக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி செயலாரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More