முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 142 அடி உயரத்தை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 7,666 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,687.50 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ரூல் கர்வ் நடைமுறையின்படி அணையில் நீர்மட்டம் 142 அடி வரை மார்ச் 31 வரை தேக்கி கொள்ளலாம். 142 அடிக்கு மேல் நீர் மட்டம் உயருமானால் அணையின் மதகுகளை திறந்து உபரி நீரை வெளியேற்ற வேண்டும். அதன் பேரில் 142 அடி நீர் மட்டம் தற்போது எட்டியுள்ளது. நீர் வரத்து அணைக்குள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கீழ் பகுதியில் கரையோரம் வசிக்கும், கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு உபரிநீர் திறப்பதற்காக மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இறுதி கட்ட எச்சரிக்கையை பெரியாறு அணையின் தேக்கடி நான்காவது பிரிவு அலுவலகத்தைத் சேர்ந்த உதவி பொறியாளர் பி.ராஜகோபால் இன்று காலை 10 மணிக்கு விடுத்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More