கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையை, தமிழகம் பராமரித்து வருகிறது. கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.எஸ்.ஓகா, சி.டி.ரவிகுமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரளா அரசு அனுமதிக்க வேண்டும். அணை பராமரிப்பு விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி 2 வாரத்தில் 2 அரசுகளும் பதில் தர ஆணையிட்டுள்ளனர்.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More