அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வரப்பட்டதாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றம் சாட்டியிருந்தார். அதோடு, அவர் ‛ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இருக்கிறேன். தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, நான் சாமானியன். எங்களது கொள்கை வேறு. அவர்களது கொள்கை வேறு. கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.வினய் குமார் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் என்று கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More