அகிலம் அனைத்தையும் அம்பிகையே விளங்குகின்றாள் என்பதற்கு ஏற்ற வகையில் நவராத்திரியின் ஒன்பது நாலும் முப்பெரும் தேவிகளை ஒன்று சேர போற்றி வணங்குகின்றோம். நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம்.
ஒன்பது நாளும் அம்பாளை வழிபடுவதற்கு நெய்வேத்யம் செய்து வழிபடுவது வழக்கம். அதிலும் முதல் இரண்டு நாட்களில், பூஜையை தவற விட்டவர்கள், இந்த மூன்றாம் நாளில்கொலு வைத்து, தங்கள் விரதத்தை தொடங்கலாம்.
செப்டம்பர் 28 நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பாளை எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம். இன்று முத்து போல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும். மூன்றாவது நாளுக்கு உரிய அம்பாள் மா சந்திரகாண்டா ஆகும். அவள் ஒரு புலியின் மீது ஏறி திரிசூலம், கட, வாள், கமண்டலம் ஆகிய நான்கு இடது கைகளிலும், தாமரை, அம்பு, தனுஷ், ஜப மாலை ஆகியவற்றை வலது கைகளிலும் ஏந்தி நிற்கிறாள். அவளுடைய ஐந்தாவது இடது கை வரத முத்திரையிலும், ஐந்தாவது வலது கை அபய முத்திரையிலும் இருப்பது சிறப்பாகும்.
நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று நைவேத்தியம் செய்து அம்பாளை வழிபடுவதால், உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்படும். இந்தக் கோலத்தை தரிசிப்பது மாணவர்களுக்கு மிகவும் நல்லது. வடமாநில உணவான கீர் படைத்தது வணங்குவது மேலும் சிறப்பாகும்.ந வராத்திரியின் முன்றாவது நாளுக்கான நிறம் நீளம்.