மும்பையில் இருந்து குஜராத் காந்தி நகர் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், குஜராத்தில் அதுல் ரயில் நிலையம் அருகே இன்று காலை 8.15 மணியளவில் வந்தபோது மாடுகள் மீது மோதியது. இதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததால் 15 நிமிட பயணம் தடைபட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து சேதமடைந்த பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் மீண்டும் ரயில் இயங்கியது. இந்த விபத்தில் மாடு ஒன்றும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவும் இரண்டு முறை வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More