செயற்கையாக ஒன்று ஆக்கவேண்டுமெனில் இயற்கையாக ஒரு பொருளை உதாரணமாக கொண்டுதான் செய்ய முடியும். அந்த வகையில் செயற்கையாக ஒரு மலரை செய்ய வேண்டுமெனில் இயற்கையாக இருக்கும் ஒரு மலரை எடுத்து தான் அதனைச் செய்ய முடியும். மலரென்றால் அடிப்படையாக ஒரு மலருக்கு இருப்பது இதழ், மொட்டு, காம்பு, இலை சில மலர்களுக்கு இவையனைத்தும் சிலவற்றில் மேலே குறிப்பிட்டவற்றில் இல்லாமலும் இருக்கலாம்.
தனிதனியாக இந்த பாகங்களை செய்து வைத்து அதை இறுதியில் ஒன்றிணைப்பது தான் பெரும்பாலோனோரின் முறையாக இருக்கிறது எனவே அதையே பின்பற்றலாம்.
மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற மலர் ஒன்றை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மலருக்காக சிவப்பு கிரேப் பேப்பரும் இலைக்காக பச்சை கிரேப் பேப்பரும் காம்பிற்காக கம்பியையும், இதை நேர்த்தியாக்க நூலும் பச்சை கம்டேப்பும் இதை செய்வதற்கு போதுமானது.
கைவினைஞர் ஆகலாம்,
இதழ்களைச் செய்ய சிவப்பு நிற கிரேப் பேப்பரை எடுத்து விருப்பமான இதழ் மாடல்களை இணையத்தில் இருந்து பார்த்து அதன்மேல் வரைந்து கொள்ளவும். பின் கூர்மையான கத்திரிக்கோலைப் பயன்படுத்தி நேர்த்தியாக நறுக்கிக் கொள்ளவும்.
இதே போன்று 3 இதழ்களை நறுக்கிக் கொள்ளவும். பச்சை கிரேப் பேப்பரை எடுத்து இலை வடிவத்தில் (2 பீஸ்) நறுக்கிக் கொள்ளவும்.
கம்பியை பூ காம்பிற்காக 5” நறுக்கிக் கொள்ளவும். பச்சை கம் டேப்பால் அதை சுற்றிக் கொள்ளவும். பின் கம்பியின் ஒரு நுனியை கொக்கிபோல் வளைத்துக் கொள்ளவும் அதில் இதழைக் கம்பியில் இணைக்க வேண்டும். படத்தில் காட்டியவாறு இதழை கம்பியுடன் வைத்து நூலால் கட்டிக் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே உருவாக்கிய இலைகளை காம்புடன் இணைக்க பக்கவாட்டாக இரண்டு கம்பிகளை எதிரெதிர் திசைகளில் இணைக்க வேண்டும். பக்கவாட்டுக் கம்பியை காம்புடன் இணைக்க பச்சை கம் டேப்பை பயன்படுத்த வேண்டும்.
இதே போல் 5 இதழ்களை கொண்டை பேசிக் செயற்கை மலர்களை தயாரிக்கலாம்.