கல்ட் இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் படங்கள் என்றாலே அதில் நடிப்பு, வசனம், பாடல்கள், காட்சி அமைப்புகள் என அனைத்து ஃப்ரேம்மும் தனித்து தெரியும். அப்படி, இவரின் இயக்கத்தில், இசை புயல் ரகுமான் இசையில் இந்தியாவே மிகவும் எதிர்பார்க்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. கல்கியின் கல்ட் நாவலை படமாக உருவாக்கி அதை ரசிகர்களுக்கு தரமாக கொடுத்துள்ளார் மணி.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஷ்வர்யா ராய் ,பிரகாஷ் ராஜ், விக்ரம், ரஹ்மான், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராமன், ரியாஸ் கான், லால், நாசர், நிழல்கள் ரவி, கிஷோர் என நட்சத்திர நடிகர்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இப்படி இவர்களின் நடிப்பில் வெளியாகி சக்சஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் சுவையையும் பூர்த்தி செய்துள்ளது. உலகமெங்கும் இப்படம் செப்டம்பர் 30 அன்று வெளியான நிலையில், இப்படத்தின் மூன்று நாட்கள் வசூல் நிலவரத்தை லைக்கா அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அதன் படி 300 கோடிகளை வெறும் மூன்று நாட்களில் இப்படம் குவித்து உள்ளது. இன்னும் பல சாதனைகளை இப்படம் நிகழ்த்தும் என திரை அரங்கு உரிமையாளர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.