Mnadu News

மெக்சிகோவில் வெடிகுண்டு தாக்குதல்! கவர்னர் கண்டன தெரிவித்து டுவீட்!

மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ மாகாணத்தில் நகர காவல், வழக்கறிஞர்கள் அலுவலகம் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் 3 பேர் பலியான நிலையில், 10 பேர் காயமடைந்து உள்ளனர்.

நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கவர்னர் என்ரிக் அல்பேரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது ஒரு கோழைத்தனம் வாய்ந்த தாக்குதல் என குறிப்பிட்ட அவர், மெக்சிகன் மாகாணம் முழுமைக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது, மேலும் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மத்திய மெக்சிகன் நகரான டொலுகா நகரில் உள்ள சந்தை ஒன்றில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Share this post with your friends