Mnadu News

மெட்டா கொடுக்கும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்! வாட்ஸ்அப் பயனர்கள் குஷி!

2009 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் அறிமுகமாகி,  2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் அசுர வளர்ச்சியை சந்தித்தது.  குறிப்பாக, இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் முன்னணி மெசேஜிங் செயலியாக உள்ளது. அவ்வப்போது, வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி, புதிய அம்சங்களை சேர்த்து வருகிறது. 

ஆம், ஒரே நேரத்தில் சுமார் 8 நபர்கள் வீடியோ கால் பேசும் வசதியும், 32 நபர்கள் வாய்ஸ் கால் பேசும் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அது போலவே தற்போதும் ஒரு புதிய மற்றும் பயனுள்ள தகவலை வெளியிட்டு உள்ளது.

உலக அளவில் வாட்ஸ்அப் செயலியை பலரும் பயன்படுத்தி வருவதால், இதன் ரேஞ்ச் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆம், வாட்ஸ்அப் செயலி விரைவில் மீண்டும் ஒரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளது. அந்த வகையில் வீடியோ கால்களின் போது ஒரு பயணர் தன்னுடைய மொபைல் ஸ்க்ரீனை மற்றொருவருக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.

தற்போது டெஸ்டிங் ஸ்டேஜில் இருந்து வரும் இந்த புதிய அம்சம், விரைவிலேயே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ஸ்கிரீன் ஷேர் வசதியை பேசிக்கொண்டிருப்பவருக்கு ஆன் செய்து விட்டால் போனில் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அவை அனைத்துமே வீடியோ காலில் இருக்கும் மற்றொரு நபரால் மொபைல் திரையில் பார்க்க முடியும்.

இந்த ஸ்கிரீன்ஷேர் வசதியானது வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ கால் பேசும்போது செல்போன் திரையின் கீழ்ப்பக்கத்தில் தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய கால் பேக் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Share this post with your friends