கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சத்து 95ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. தற்பொழுது நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருகிறது. மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு ஓரு லட்சத்து 75 ஆயிரம்; கன அடியாக குறைந்தது. நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு ஓரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More