காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 75ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும், உபரி நீர்ப் போக்கிகள் வழியாக வினாடிக்கு 53 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More