Mnadu News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.5 லட்சம் கன அடியாக நீடிப்பு.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாகவும் காவிரியின் உபநதிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
,இதனால் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு ஒரு நீரின் அளவு வினாடிக்கு 1லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
,இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 83 ஆயிரத்து 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி ஆக உள்ளது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மேட்டூர் அணையில் இருகரைகளிலும் நீர்வளத் துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளை கட்டுப்பாட்டு அறையில் பொறியாளர் தலைமையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More