கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மீண்டும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 33 ஆயிரத்து 420 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது.இன்று, அதிகாலை 3.30 மணிக்கு நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. மேட்டூர் அணை நிரம்பியதால் தொடர்ந்து வரும் வெள்ள நீர் மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ளை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வருவாய்த் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் தனமாகரிபட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு காலாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More