காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 419 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 புள்ளி 72 அடியாகவும், நீர் இருப்பு 91 புள்ளி 44 டி.எம்.சியாகவும் உள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ,மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டும் மெல்ல உயர தொடங்கியுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More