காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மூன்றாவது நாளாக வினாடிக்கு ஒரு லட்சத்து 5ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 5ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More