Mnadu News

மே மாதம் வட்டியை உயர்த்த அமெரிக்க மத்திய வங்கி திட்டம்: ராய்ட்டர்ஸ் தகவல்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;, அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி மே மாதத்தில் இறுதியாக வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும், பின்னர் 2023 முழுவதும் அதே விகிதங்களை நிலையானதாக வைத்திருக்கும்.அதோடு, குறுகியகால மந்தநிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.அதே நேரம்,அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும். அதே வேளையில் வங்கித் துறையில் ஏற்படும் அழுத்தத்தால்; வட்டி விகிதத்தை 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவிதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை 2 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது அங்கு பணவீக்கம் 3 சதவீதத்திற்கு மேல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends