1996ம் ஆண்டு ஜெ.ஜெ தொலைக்காட்சிக்கு உகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலவாணி முறைகேடு செய்ததாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணை முடிவடைந்த நிலையில் சசிகலா மற்றும் பாஸ்கரன் தரப்பு விசாரணைக்கு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவை சென்னை வரவைப்பதற்காக உத்தரவை நீதிபதிகள் பெங்களூரு சிறைக்கு அனுப்பியது. இந்நிலையில் சென்னை நீதிமன்றம் அதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. தேவைப்படும் பட்சத்தில் காணொளிக் கட்சி மூலம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கில் சம்மந்தப்பட்ட பாஸ்கரன் நேரில் ஆஜரானார். சசிகலாவை விசாரிக்க போதிய தொழிநுட்ப விசயங்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் இல்லாததால் சசிகலாவை வருகிற மே 28ம் தேதி விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.