மணிப்பூரில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்ட நிலையில், வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து மைதேயி இன மக்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையின்போது, அவர்களை நோக்கி வன்முறை கும்பல் ஒன்று வந்தது. ஆனால், அந்த கும்பல், மைதேயி மக்களை தாக்க விடாமல் குகி இனப் பெண்கள் காத்துவிட்டனர்.ஒரு சாலை முழுக்க குகி இனப் பெண்கள் நின்றுகொண்டு, மைதேயி இன மக்கள் மீது வன்முறைக் கும்பல் எந்த தாக்குதலையும் நடத்த முடியாமல் காத்துள்ளனர். இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.இதன் மூலம், மனிதக் குலத்துக்கு குகி இனப் பெண்கள் மிக அழுத்தமான ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More