Mnadu News

மோடி அரசின் 9-வது ஆண்டு விழாவை ஒரு மாதம் கொண்டாட திட்டம்.

பிரதமர் மோடி, 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றார். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த ஆண்டில் மே 30-ஆம் தேதி, தொடர்ந்து 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். வருகிற 30-ஆம் தேதியுடன் அவர் ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ஒருமாத காலம் பிரமாண்டமாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. அதாவது, மே 30-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 30-ஆம் தேதிவரை இந்த கொண்டாட்டம் நடைபெறும். பிரதமர் மோடி, இம்மாதம் 30 அல்லது 31-ஆம் தேதி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன், ஒரு மாத கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Share this post with your friends