ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வைஷ்ணவ தேவி கோயிலில் நடத்தினார். புpன்னர் ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பேசிய அவர், காஷ்மீரில்; 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டால், ரத்தம் பெருக்கெடுத்து ஓடும் எனக்கூறியவர்களுக்கு, இன்றைய காஷ்மீர் பேரணியும், மோடிக்கு ஆதரவான கோஷம் ஆகியவை பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரை 3 குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்தன. ஆனால், தற்போது, பஞ்சாயத்துகள், மாவட்ட கவுன்சில்களை தேர்வு செய்யும் அதிகாரம் 30 ஆயிரம் பேருக்கு கிடைத்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக மோடி அரசின் கடுமையான நடவடிக்கை காரணமாக, ஆண்டுதோறும் உயிரிழக்கும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 134 ஆக குறைந்துள்ளது என்று அமித்ஷா பேசினார்.