Mnadu News

யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதுமையான கதைகளை தேர்வு செய்து அதில் தனது முத்திரையை பதிப்பதில் விஜய் சேதுபதி வல்லவர். தென் மேற்கு பருவ காற்று படத்தில் துவங்கிய பயணம் தற்போது பல மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு மார்கெட் அதிகரித்துள்ளது.

அண்மையில், வெளியான விக்ரம், மாமனிதன் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.
தற்போது, விடுதலை, மெரி கிறிஸ்துமஸ், மும்பைகார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More