பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மலியுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்தது வருகிறது. இந்நிலையில், வெய்தியாளர்களிடம் பேசியுள்ள காமல்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை வினிஷ் போகத்,நாங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டோம். கடந்த முறை நாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம். இந்த முறை இந்த வழக்கில் எந்த வித அரசியலும் இருக்காது என்று நம்புகிறோம்’ என்றார்.அவரையடுத்து,பேசியுள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியர், இந்த முறை எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிகளும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது’ என்றார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More