விஷால், சுனைனா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “லத்தி”. ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தின் செகண்ட் சிங்கிள் நேற்று வெளியானது. யுவன் இசையில் யுவன், ரஞ்சித் கோவிந்த, ஸ்வேதா மோகன் ஆகியோர் குரல்களில், கார்த்திக் நேத்தா வரிகளில் ரொமான்டிக் பாடல் வெளியாகி மீண்டும் மேஜிக் நிகழ்த்தி உள்ளது.
ஊஞ்சல் மனம் என்ற அந்த பாடல் நா.முத்துகுமார் வரிகளை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/DG90FXsLM3g