Mnadu News

யுவன் – கார்த்திக் நேத்தா கூட்டணியில் லத்தி படத்தின் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி வரும் படம் “லத்தி”. முதல் முறையாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

விஷாலின் வழக்கமான ஃபார்முலா
வான ஆக்சன் படமாக இது உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஊஞ்சல் மனம்” பாடலின் புரொமோ நேற்று வெளியாகி உள்ளது. கார்த்திக் நேத்தா வரிகளில் யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த, ஸ்வேதா மோகன் ஆகியோர் இப்பாடலை பாடி உள்ளனர்.

நாளை முழு பாடல் வெளியாகிறது, அதோடு இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

புரோமோ லிங்க் : https://youtu.be/wA4vCGJXfw4

Share this post with your friends