Mnadu News

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்!

தமிழ் சினிமாவின் நல்ல நடிகராக வளர்ந்துள்ள நடிகர் கார்த்தி. கமர்ஷியல் படங்களும் சரி, கதை முக்கியத்துவம் வாய்ந்த படங்களும் சரி எதுவானாலும் அதில் இறங்கி அடிப்பதில் இவர் கில்லாடி எனலாம்.

சமீப காலங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, சுல்தான்,பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஹிட் மேல் ஹிட் கொடுக்க. தனது அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அப்படி, இரும்புதிரை, ஹீரோ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.மித்ரன் உடன் கூட்டணி அமைத்துள்ளார் கார்த்தி.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். இவர்களோடு ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், சிம்ரன் லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்தின் இசையமைப்பாளர். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இப்படத்துக்கு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்கிறார்.

சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீஸர் வெளியாகி யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ளது. சர்வதேச உளவாளி ரோலில் கார்த்தி பல ரோல்களில் நடித்து உள்ளார் என தெரிகிறது.

படத்தின் டீஸர் : https://youtu.be/98v7iA0LgzY

Share this post with your friends