Mnadu News

யூடியூப்பில் வரவேற்பை பெற்றுள்ள பிரின்ஸ் டிரெய்லர்!

நிகழ்ச்சி தொகுப்பாளராக தமது கலை வாழ்வை துவக்கிய சிவா தற்போது மோஸ்ட் வான்டட் ஹீரோவாக வலம் வருகிறார். முதல் ஐந்து ஹீரோக்கள் வரிசையில் அவர் உள்ளார். விடாமுயற்சி, உழைப்பு மட்டுமே இருந்தால் காலம் நமக்கு கை கொடுக்கும் என்பதற்கு சிவா ஒரு சிறந்த உதாரணம்.

இவர் நடிப்பில் வெளியான டான் படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. கடந்த சில காலங்களில் பல தோல்விகளை சந்தித்து வந்த சிவாவுக்கு இந்த பிரம்மாண்ட வெற்றி ஒரு எனர்ஜி டானிக்காக அவரை இன்னும் நகர உற்சாகம் ஊட்டியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் தமன் இசையில் சிவா, மரியா ரபோஷக்கா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூப் இல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

டிரெய்லர் லிங்க்: https://youtu.be/KHUZsWSwxWM

Share this post with your friends