Mnadu News

யூடியூப் சேனலில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை கொடுமைப்படுத்திய வளர்ப்பு தாய்

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அனைத்து தலைமுறையினருக்கும் பெரிதும் கவரும் வகையில் யூடியூப் சேனல் வளர்ந்துள்ளது . இந்த யூடியூப் சேனல்களை நம் எங்கு வேண்டுமானாலும் ,எந்த நேரத்திலும் பார்த்து நமது பொழுதை கழித்துக்கொள்ளலாம் . அதோடு மட்டுமல்லாமல் யூடியூப் சேனல்களில் நடித்தே பல பேர் பிரபலமாக மாறிவிடுகின்றனர் .

 

ஆனால் சிலர் இதை தங்கள் சுயலாபத்திருக்காக  மோசமாக  பயன்படுத்தி வருவதே  வேதனை அளிக்கிறது.அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள ‘ஃபெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்’ எனும் யூடியூப் சேனல் ஒன்றில் பிரபல தொடர்களான குக்கி கேப்ச்சர் மிஷன்’ மற்றும் ‘சூப்பர் பவர் பேபி பேட்டில்’ என்ற தொடரில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு நேர்ந்த துயர சம்பவம் என்னவென்றால் , இந்த ‘ஃபெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்’ நடத்தி வந்த மச்செல் ஹாக்னி என்ற பெண் சரியாக நடிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகளை அடிப்பதும் , பசியில் , தண்ணீரின்றி துடிக்க வைப்பதும் கடும் சித்திரவதை செய்துள்ளார் .

 

மேலும் இதில் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் போலீசாரிடம் அள்ளித்தா புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து யூடியூப் சேலை முடக்கியுள்ளனர் .மேலும் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளை போலீசார் மீட்டனர் . அதிர்ச்சியூட்டும் விஷயம் என்றால் அந்த பெண் இந்த குழந்தைகளின் வளர்ப்பு தாய் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends