Mnadu News

யூடியூப் டிரெண்டிங்கில் “ஆதிபுரூஷ்” டீஸர்!

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தான் பிரபாஸ் என்ற நல்ல நடிகரை உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டியவர். பாகுபலி படத்துக்கு முன் பின் என பிரபாஸ் வாழ்வை நாம் பிரிக்கலாம்.
இந்த படத்துக்கு பிறகு பான் இந்தியா வாய்ப்புகள் இவர் கதவை தட்டின. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் இவர் எதிர்பார்த்த படி ஓடாமல் பெரிய அளவில் தோல்வியை தழுவியது. ஆனாலும், இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது சலார், ஆதிபுரூஷ் மற்றும் மற்றும் அஸ்வின் நாக் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்துமே மெகா பட்ஜெட் படங்கள். பிரபாஸ் தற்போது பெரும் சம்பளம் கிட்டத்தட்ட 150 கோடிகள் என சொல்லப்படுகிறது.

இவற்றில் “ஆதி புருஷ்” படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதை ஆக கிரித்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள். ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் டீசர் நேற்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது யூடியூப் இல் நம்பர் டிரெண்ட் ஆகி கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் வரும் 2023 ஜனவரி 12ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டீஸர் லிங்க் : https://youtu.be/HwdJj8lhOo8

Share this post with your friends