Mnadu News

யூடியூப் ப்ரீமியம் பயன்படுத்தாமல் விளம்பரம் இல்லாத சேவையை பெறுவது எப்படி?

யூடியூப் பார்க்கும்போது விளம்பரங்கள் விடியோவிற்கு முன் தவறாமல் வந்துவிடும்.அது வராமல் தடுக்க  ‘Adblock for YouTube’ என்ற Chrome நீட்டிப்பினை பயன்படுத்தலாம்.

பொழுதுபோக்கு, அறிவு தேடலுக்காக என பற்பல விஷயங்களுக்காக யூடியூபை பயன்படுத்திக்கிறோம். ஆனால் அதில் பெரும் பிரச்சனை, 10 நிமிட வீடியோவில் 3 அல்லது 4 விளம்பரங்கள் வருவதே அனைவர்க்கும் எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். விளம்பரம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் யூடியூப் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.

யூடியூப் ப்ரீமியதிற்கு மாதத்திற்கு 129 ரூபாய் அல்லது 3 மாதங்களுக்கு 399 ரூபாய் அல்லது ஓராண்டுக்கு 1,290 ரூபாய் என்ற அடிப்படையில் யூடியூப் ப்ரீமியம் செலுத்தப்படவேண்டும். நீங்கள் ப்ரீமியம் வாடிக்கையாளராக இருந்தால், விளம்பர இடையூறுகள் இன்றி வீடியோ பார்க்கும் வசதி கிடைக்கும். இது தவிர பிக்சர் – இன் – பிக்சர் பிளேபேக் வசதி, யூடியூப் ப்ரீமியம் மியூஸிக் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். வீடியோக்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இதில் சில யுக்திகளை உபயோகித்தால் யூடியூப் ப்ரீமியம் செலுத்தாமல் நீங்கள் யூடியூப்பில் விளம்பரம் இல்லாத வீடியோக்களை பார்க்க முடியும். YouTube உலகின் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். பாடல்கள் அல்லது திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் எதுவாக இருந்தாலும் ஒரே கிளிக்கில் பார்த்துவிடமுடியும்.

விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம் என்று நீங்கள் விரும்பினால், யூடியூப் -ஐ உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தாமல் இணைய உலாவியில் பயன்படுத்த வேண்டும். ‘Adblock for YouTube’ என்ற Chrome நீட்டிப்பின் உதவியுடன், நீங்கள் யூடியூப் விளம்பரங்களை இலவசமாகத் தடுக்க முடியும். இந்த நீட்டிப்பை Chrome மற்றும் Edge உலாவிகளில் பயன்படுத்தலாம்.

குரோம் நீட்டிப்பைத் தவிர, விளம்பரங்கள் இல்லாமல் YouTube-ல் வீடியோக்களைப் பார்க்க ஒரு வழி உள்ளது. அதற்கு நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை.  கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவச ‘Adblocker Browser: Adblock & Private Browser’ என்ற மூன்றாம் தரப்பு செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பயன்பாட்டின் மூலம் யூடியூப் வீடியோக்களில் இருந்து விளம்பரங்களை மிக எளிதாகத் தடுக்க முடியும்.

Share this post with your friends