தனது நடனத்திலும் பஞ்ச் வசனத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை சம்பாதித்தவர் தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு . தொடர்ந்து அதிக படங்களை நடித்து வந்த சிம்பு சிறிது காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இந்த இடைவேளையில் சிம்பு கொஞ்சம் அல்ல நல்லாவே குண்டாகிவிட்டார். அப்படி இருந்தும் ‘அச்சம் என்பது மடமையடா ‘என்ற படத்தின் மூலம் ஒரு நல்ல கம்பேக் கொடுத்தார் சிம்பு. அதன் பின் உடல் எடை குறைக்காமல் ‘செக்க சிவந்த வானம்’ மூலமாகவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினர் .
இருந்தாலும் அவர் குண்டாக இருப்பதால் முன்னர் போல அவருக்கு பட வாய்ப்பு ஏதுவும் பெருசா வருவது இல்லை. சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவான்’ என்ற திரைப்படமும் பெருசா ஓடாத காரணத்தினால் சிம்புவின் ரசிகர்கள் உடல் எடையை குறைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் ரசிகர்களின் விருப்பத்திற்க்கேற்ப சிம்பு உடல் எடை குறைக்க முடிவு செய்துள்ளார். இதற்கான சிகிக்சைக்காக சிம்பு லண்டன் சென்றிருப்பதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இனி வரும் படங்களில் சிம்புவை பழைய சிம்புவாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது .