நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில், ‘அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.