சில வருடங்களாக லைகா நிறுவனம் தொடர் தோல்வி படங்களை கொடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதையெல்லாம் இந்த வருட லைக்கா வெளியீடுகள் முறியடித்து மீண்டும் வசூலை வாரிக் கொடுத்துள்ளன.

ரத்தம் ரணம் ரௌத்திரம், சீதா ராமம், டான், பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் பட்ட கஷ்டங்களை போக்கியுள்ளது. இவை அனைத்துமே வசூல் சாதனை செய்தன.

இதன் காரணமாக, ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை லைக்கா தயாரிக்க உள்ள தகவல் கசிந்துள்ளது. அதில் ரஜினிக்கு ₹300 கோடிகள் சம்பளம் பேசப்பட்டு வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டான் பட இயக்குனர் சிபி ஒரு படமும், ஐஷ்வர்யா ரஜனிகாந்த் ஒரு படமும் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
