Mnadu News

ரஜினி ரஜினிதான்…..

பேட்ட படம் ரிலீஸ் ஆன பிறகு அதிகம் பார்த்த விமர்சனங்களில் இடம் பெற்ற ஒரு வாக்கியம் உங்களுக்குள்ள இருக்க ரஜினி ரசிகனை பேட்ட படம் வெளிய கொண்டு வரும்னு தான், அத படிக்கும்போது தான் புரிஞ்சுது நாம எல்லாரும் நேரடியாவோ இல்ல மறைமுகமாவோ நமக்குள்ள ரஜினி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காரு.

சின்ன வயசில் பென்சிலையோ பேனாவையோ ரஜினி ஸ்டைலில் தூக்கி போட்டு பிடிக்காத ஆளே இருக்க முடியாது , அதே போல முதல் முறையாய் கண்ணாடியை போட்டு பாக்கும் போதுகூட அவரோட ஸ்டைலே ட்ரை பண்ணாத ஆளே இல்ல, அந்த அளவுக்கு ரஜினி மூன்று தலைமுறை ஆட்களை ஆட்கொண்டு இருக்காரு ரஜினிகாந்த்.

Image result for rajinikanth latest photos

எல்லாரும் ரஜினியை இந்த அளவுக்கு ரசிக்கிறதுக்கு காரணம் ரஜினியோட ஆளுமை , ஆரம்ப காலங்களில் தனக்கு தமிழ் வசனங்கள் சரியா பேச வராதுன்னு வேகவேகமாக வசனங்கள் பேசுவாரு அதுவே  ஸ்டைலாவும் ஆகிடுச்சு ,இப்போகூட ரஜினி மாதிரி மிமிக்கிரி பண்றவங்க அந்த ஸ்டைலியையே பேசுறத பாத்து இருப்போம்.

Related image

ஆரம்ப காலங்களில் ரஜினி இப்போ இருக்க விஜய்சேதுபதி மாதிரி எல்லா விதமா வித்தியாசமான கதைகளிலும் நடிச்சு இருக்காரு , ஆனா ஒரு காலகட்டத்துக்கு பிறகு தனக்குனு ஒரு பாணியை உருவாக்கிட்டாரு அதை கண்டு புடிச்சதுதான் அவரோட புத்திசாலித்தனம் ,இப்போ நடிக்குற சில நடிகர்கள் கூட அவரோட தாக்கம் இல்லாம நடிக்கிறது இல்லை.

Image result for rajinikanth with people

அந்த அளவுக்கு ரஜினி ஆட்கொண்டு இருக்காரு , இதுக்கலாம் காரணம் அவருடைய ரசிகர் எதை ரசிப்பாங்க குழந்தைகளுக்கு எது புடிக்கும்னு மெனக்கிட்டு புதுசு புதுசா தன்னோட பாணியிலே மெருகேத்திக்கிட்டெ இருக்காரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இது அடுத்த தலைமுறைக்கும் போகும்.

பேட்ட படம் வந்து போயிடிச்சு ஆனா பலரும் ரஜினி படங்கள் முன்னமாதிரி ஓடறது  இல்ல அதுக்கு அவரோட அரசியல் பிரவேசம் ஒரு காரணனும்னு அவரோட நேரம் முடிஞ்சதாவும் சொல்றாங்க.  காரணம் ரஜினி படத்தோட அஜித்தோட படம் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெற்று இருக்கு , ஆனா எதுவும் அவரோட தாக்கத்தை குறைக்க முடியவில்லை. அரசியல்வாதியா ரஜினி மேல விமர்சனம் இருக்கலாம் ஆனா ஒரு நடிகனா ரஜினி சூப்பர் ஸ்டாராத் தான் இருக்காரு. அவர்கூட மத்தவங்களை ஒப்பிடறது தவறு.

Related image

ரஜினி ரஜினிதான் , பிற நடிகர்களின் ரசிகர்கள் நடிகர் ரஜினியை தர குறைவா பேசுறது வேற மாதிரியான விமர்சனங்கள் வைக்கிறது என்னை பொறுத்த வரைக்கும் மலினமாக இருக்கிறது. ரஜினியோட வசனமே இது எல்லாத்துக்கும் பதில் இந்த நம்பர் 1 நம்பர் 2லாம் குழந்தைங்க விளையாட்டு He is the only one…..

Share this post with your friends