பான் இந்தியா படங்களை எடுத்து இந்திய படங்களை உலக எல்லைக்கு கொண்டு சேர்க்கலாம் என்ற பாதையை போட்டு தந்தவர் இயக்குநர் ராஜமௌலி.
பாகுபலி 1&2 இமாலய வெற்றிக்கு பிறகு ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”.
கீரவாணி இசையில் பாடல்கள், பின்னணி இசை, வசனம், கிராஃபிக்ஸ், காட்சிகள், கதைக்களம் என அனைத்தும் கவனம் ஈர்த்து ரசிகர்களை கட்டி போட்ட படம் ரத்தம் ரணம் ரௌத்திரம். இப்படம் ₹1200 கோடிகளை வசூல் செய்தது, அதே போல அண்மையில் இப்படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் இமாலய வெற்றியை குவித்து வருகிறது.
இந்த நிலையில், ராஜமௌலி மற்றும் அவர் தந்தை ரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.