Mnadu News

ரத்தம் ஷூட்டிங் நிறைவு! விரைவில் ரீலீஸ்!

இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஆரம்பம் முதலே இவரின் பாடல்களும், இசையும் தனித்து பேசப்பட்டன. இவர் பயன்படுத்தும் புரியாத சொற்கள், அனல் பறக்கும் துள்ளல் இசை என இசையில் தனக்கென தனி பாணியை கையாண்டு வெற்றி கண்டவர். இப்படி இசை அமைத்து கொண்டிருந்தவர் சட்டென நடிக்க துவங்கினார்.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான நான், பிச்சைக்காரன், சலீம், எமன், அண்ணாதுரை என அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்று பெரிதாய் பேசப்பட்டன. தற்போது சுமார் 7 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆன்டனி.

அவற்றில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‛‛ரத்தம்” படமும் ஒன்று. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, ஓஏகே சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கண்ணன் இசையமைக்கிறார்.

முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் ரத்தம் படத்தின் இந்திய படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. தாய்லாந்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Share this post with your friends