Mnadu News

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11 லட்சத்து 27 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்குவதன் காரணமாக ரயில்வேக்கு ஆயிரத்து 732 கோடி செலவாகும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends