ரஷியாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததுள்ளதாக ரஷ்ய நாட்டில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 ஆம்புலன்ஸ் குழுக்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக ரஷியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அம்மாகாணத்தின் ஆளுநர் பேட்டி கொடுத்துள்ளார், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இஷெவ்ஸ்கில் உள்ள ஒரு பள்ளிக்குள் நுழைந்து ஒரு காவலரையும் அங்கிருந்த சில குழந்தைகளையும் கொன்றதாக சிசிடிவி பதிவாகி உள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது. பள்ளி குழந்தைகள் வெளியேற்றப்பட்டு, அதைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
