Mnadu News

ரஷ்யா மீது பொருளாதார தடை:இந்திய எண்ணெய் நிறுவனங்களின் ரூ.2,500 கோடி முடக்கம்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரால், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள சில எண்ணெய் நிறுவனங்களில், நம் நாட்டைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், 46 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து,இந்நிலையில்,போர் துவங்கியப் பின் கிடைத்துள்ள ஈவுத் தொகைகள், அங்குள்ள வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொருளாதார தடையால், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை எடுக்க முடியாமல், நம் எண்ணெய் நிறுவனங்கள் தவிக்கின்றன.இதனால், ஆயில் இந்தியாநிறுவனம், இந்தியன் ஆயில் வாரியம், பாரத் பெட்ரோ ரிசோசர்ஸ் நிறுவனம், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகையை எடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

Share this post with your friends